பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவன்...! வீடியோ இணையத்தில் வைரல்...!

பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவன்...! வீடியோ இணையத்தில் வைரல்...!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் பேருந்தின் பின்பக்க ஏணியில் பள்ளி மாணவன் பயணிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிளேஸ்பாளையம் முதல் மீஞ்சூர் வரை செல்லும் தனியார் பேருந்து ஆரணியை கடந்து புதுவாயல் செல்லும் வழியில் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் பயணிக்கின்றனர். 

அப்போது பேருந்தின் படிக்கட்டில் சிலர் தொங்கியபடி பயணித்த நிலையில் ஒரு மாணவன் பேருந்தின் பின்பக்க ஏணியில் நின்றபடி பயணித்துள்ளான். அப்படி ஆபத்தான முறையில் மாணவன் பயணிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பேருந்தின் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்ய கூடாது என அறிவுறுத்தி வரும் நிலையில் மாணவன் ஒருவன் பின்பக்க ஏணியில் பயணித்துள்ளதால் இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிக்க : சிறுத்தையை வேட்டையாடிய விவகாரத்தில் 5 பேர் கைது...