மேற்கூரையை சுத்தம் செய்யச் சென்ற மாணவர்....தவறி விழுந்து...?

மேற்கூரையை சுத்தம் செய்யச் சென்ற மாணவர்....தவறி விழுந்து...?
Published on
Updated on
1 min read

சேலம் அருகே ஆச்சசாங்குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்(17). இவர் கோரிமேடு பகுதியில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டாம் ஆண்டு தொழிற்கல்வி பயின்று வருகிறார். இந்த நிலையில் ஆயுத பூஜை பண்டிகைக்காக சக மாணவர்களுடன் கோகுல் ஆய்வுக்கூடத்தின் மேற்கூரையில் ஏறி சுத்தம் செய்துள்ளார். அப்போது திடீரென 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததில் கோகுல் படுகாயம் அடைந்தார். 

அவரை சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com