தனியார் பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து...

கோவை போத்தனூர் பகுதியில் உள்ள பழைய பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிளான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
தனியார் பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து...
Published on
Updated on
1 min read

கோவை | கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் சலீம். இவர் போத்தனூர் அடுத்த மேட்டூர் சாய்பாபா கோயில் அருகே உள்ள காலி இடத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்கள் மற்றும் காப்பர் கம்பிகளை தனியாக பிரிக்கும் குடோன் வைத்துள்ளார்.

இந்நிலையில் இரவு குடோனில் ஒயரில் உள்ள காப்பர் கம்பிகளை தனியாக பிரித்து எடுக்க  தீ பற்ற வைத்ததாக தெரிகிறது. அந்த தீ அருகே உள்ள பிளாஸ்டிக் பொருட்களிலும், மரப்பொருட்களிலும் எதிர்பாராத விதமாக பரவியதில் குடோன் முழுவதும் தீப்பிடித்து எரியத் துவங்கியுள்ளது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் இருந்து நாசமானது.

மேலும் தீ விபத்து ஏற்படும்போது உள்ளே யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிளாஸ்டிக் கழிவுகள் தீயில் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றத்துடன் புகை வெளியேறியது. 

இதனால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்குள்ளாகினர். இது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com