உலாவரும் கரடி.....அச்சத்தில் மக்கள்.....

உலாவரும் கரடி.....அச்சத்தில் மக்கள்.....

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, பெரியார் நகரிலுள்ள குடியிருப்புப் பகுதிக்கு அதிகாலை வந்த கரடி ஒரு வீட்டிற்குள் நுழைந்து சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சிகளைப் பார்த்த பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் உலா வரும் கரடியை பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:    கரும்பு விவசாயிகளுக்கு 450 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்கப்படுமா?!!!