அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த காட்டுயானை..! அச்சத்தில் பயணிகள்...!

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த காட்டுயானை..! அச்சத்தில் பயணிகள்...!

கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த காட்டுயானை.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பகல் மற்றும் இரவு நேரங்களிலேயே யானை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில்  கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றை மூள்ளூர் என்ற இடத்தில் வழிமறித்த காட்டுயானை ஒன்று திடீரென பேருந்து கண்ணாடியை தும்பிக்கையால் உடைத்தது.  

இதனை கண்ட பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் யானை அருகில் இருந்த புதர் செடிக்குள் சென்றதால் நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள் அதன் பின் வாகனங்களை இயக்கினர். மேலும் ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்து அட்டகாசம் செய்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அடர்ந்த வனப்பகுதியில் யானையை விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க : என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி கொள்ளையடித்த சம்பவம்...! தானாக சரணடைந்த மர்ம கும்பல்...!