பெண் ஒருவரை போலீஸ் மோப்பநாய் கவ்வி பிடித்த பரப்பரப்பு சம்பவம்...

பெண் ஒருவரை போலீஸ் மோப்பநாய் கவ்வி பிடித்த பரப்பரப்பு சம்பவம்...
Published on: 
Updated on: 
1 min read

திண்டிவனத்தின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்ட நிலையில் பெண் ஒருவரை மோப்பநாய் கவ்வி பிடிக்க முயன்றதால்  பரபரப்பு ஏற்ப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு நடைபெற்று பரபரப்பு ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் போலீசார் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பில் தொடர்புடைய நபர்களை கைது செய்தும் ,
பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தியும்  வருகின்றனர்.

 இந்த நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கோவில்கள்,மசூதிகள்,
வணிக நிறுவனங்கள்,ரயில் நிலையம்,பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான குழு மோப்பநாய் ராணி உதவியுடன் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.அப்பொழுது பேருந்து நிலையத்தில் சோதனை செய்துக் கொண்டு இருக்கும்போது மோப்பநாய் ராணி திடீரென அங்கு சாலையோரம் பழ வியாபாரம் செய்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை கவ்வி பிடிக்க முயன்றது.

அப்போது அந்தப் பெண்மணி அச்சத்தில் கூச்சலிட்டார்.இதனால்  போலீசார் அந்தப் பெண் இருந்த இடம்   மற்றும் அங்கிருந்து 100 மீட்டர் இடைவெளி  உள்ள கடைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.மேலும் அந்த பெண்ணிடம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதுடன் ,தீவிர விசாரணைக்கு பின்பு அங்கிருந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com