காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை...

காதலுக்கு எதிா்ப்பு தொிவித்ததால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை...

தென்காசி | பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்தவர் சேர்மன் (வயது 25). இவர் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் கூலித்தொழில் செய்து வருகிறார்.

சேர்மன்  வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் பெற்றோர்கள் அவரை தேடியபோது பெத்தநாடார்பட்டி மாயாண்டி கோவில் அருகே உள்ள தனக்கு சொந்தமான மாட்டு தொழுவத்தில் தூக்கிட்டு பிணமாக தொங்கினார்.

மேலும் படிக்க | அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு...!!!

இதைக்கண்ட சேர்மனின் உடலைக் கண்ட உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாவூர்சத்திரம் போலீசார் தூக்கில் பணமாக தொங்கிய சேர்மனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகதென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாலிபர் தூக்கிட்டு இறந்த சம்பவத்தில் முதற்கட்ட விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்ததாகவும் அதற்கு பெண் வீட்டார் மட்டுமின்றி தனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களும்  கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஆடு மேய்க்க சென்ற பெண் கிணற்றில் விழுந்து பலி...