காட்டெருமையிடம் சிக்கிய இளைஞர்...! மருத்துவமனையில் அனுமதி...!

காட்டெருமையிடம் சிக்கிய இளைஞர்...! மருத்துவமனையில் அனுமதி...!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கவர்க்கல் செட்டில்மென்ட் பகுதியில் சுமார் 16 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தனது வீட்டிலிருந்து அருகே உள்ள ஆற்றுப்பகுதிக்கு சென்ற சிவப்பிரகாஷ்(20) என்பவரை அப்பகுதியில் பதுங்கி இருந்த காட்டெருமை ஒன்று எதிர்பாராத விதமாக மூன்றுமுறை தாக்கியுள்ளது.

இதில் உடலில் பல பகுதிகளில் காயமடைந்து மூக்கிலிருந்து ரத்தம் கசிந்த நிலையில் வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : காவிமயமாவதற்கு முன் காக்கிமயமான கடலூர்...!