
புதுக்கோட்டை | கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் கால்நடைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஊராட்சியில் இன்று சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடை மருத்துவர்கள் பங்கேற்று முகாமுக்கு அழைத்து வரப்பட்ட கால்நடைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டு நோய் தொற்று இன்றி கால்நடைகளை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து அறிவுரைகளை வழங்கினார்.
இதன் பின்பு சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு ஊராட்சி தலைவி மலர் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர்கள் பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.