காதலர் தின எதிர்ப்பு போஸ்டர்களால் ராமநாதபுரத்தில் பரபரப்பு!!! அப்படி என்னதான் இருக்கு காதலில் ?

காதலர் தின எதிர்ப்பு போஸ்டர்களால் ராமநாதபுரத்தில் பரபரப்பு!!! அப்படி என்னதான் இருக்கு  காதலில் ?

 

காதலர் தினம்:

உலகத்தை இயக்கும் புள்ளியாக காதல் நம் அனைவரின் வாழ்விலும் கிடைத்திருக்கும் அல்லது கடந்திருப்போம்,வாழ்ந்து கொண்டிருப்போம் அப்படியில்லை என்றால் வாழ்ந்திருபோம்.அப்படி பட்ட காதலை கொண்டாடி தீர்ப்பதற்காகவே பிப்ரவரி இரண்டாம் வாரம் முழுவதும் காதலை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காதலர்கள், காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என அனைவரும் பிப்ரவரி 14-ஆம் தேதி மகிழ்ச்சியோடு கொண்டாடு வருகின்றனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு போஸ்டரில்: 

இந்நிலையில்  ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில்  காதல் தினம் என்பது பெண்களின் கற்பு கொள்ளையர் தினம் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் சிந்திப்பீர் சீரழிந்து விடாதீர் பெண்களை சீரழிக்கும் காமுகள் தினம் தான் காதலர் தினம் இது ஒரு கழிசடை தினம் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது

 கற்பைச் சூரையாடும் காதலர் தினம் நமக்குத் தேவையில்லை என்ற கண்டன போஸ்டர்கள் ராமநாதபுரம் நகரில்  பாரபரப்பான சாலைகள், பள்ளி, கல்லூரி,பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சுவர்களிலும்,காவல் நிலையம் காவலர்கள் குடியிருப்பு பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. காதலர் தினத்தன்று காதலர் எதிர்ப்பு சுவரொட்டிகளால் ராமநாதபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க| திருமணத்துக்கு வற்புறுத்திய 90’ஸ் கிட்-டை கொன்ற தந்தை