கட்டையால் அடித்து கொலை முயற்ச்சி...6 பேர் கைது... 

கட்டையால் அடித்து கொலை முயற்ச்சி...6 பேர் கைது... 

தலைமைச் செயலக குடியிருப்பு பகுதியில் முன் விரோதம் காரணமாக சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இருவரை கட்டையால் அடித்து கொல்ல முயன்ற  வழக்கில் ஆறு பேர் கைதாகி உள்ளனர். 

சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் யோவான் என்கின்ற யோனா (21) .இவர் மீது தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையம் மற்றும் அயனாவரம் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. யோவான் அவரது நண்பர் அஜித் என்கின்ற முட்டை பஜ்ஜி என்பவருடன் நேற்று முன்தினம் மாலை அயனாவரம் குட்டியப்பன் தெரு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த ஆறு நபர்கள் யோவான் மற்றும் அஜித்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர் .அப்பொழுது அங்கிருந்த ஆறு பேரும் சேர்ந்து கட்டையால் இருவரையும் பலமாக  தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

மேலும் தெரிந்து கொள்ள /// வீட்டுக்குள் புகுந்து திருடிய மர்ம கும்பல் ;குற்றவாளிகளை தேடி வரும் போலீசார்...
 
அங்கிருந்தவர்கள் இரத்த காயம் அடைந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் யோவான் மற்றும் அஜித் ஆகிய இருவரும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீசார் கீழ்ப்பாக்கம் பம்பிங் ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த கர்ணா(25) ,தினகரன் என்கின்ற தீனா(24) ,விஜய்(24) ,ராஜேஷ் குமார் என்கின்ற அஜய்(22) ,அபினேஷ்(23) ,ராஜசேகர்(22) ஆகிய ஆறு பேரையும் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த தலைமைச் செயலக போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.