வடமாநில டிடிஆர் மீது சரமாரி தாக்குதல்... ஓடும் ரயிலில் பரபரப்பு...

ஓடும் ரயிலில் வடமாநில ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது சரமாரியாக தாக்குதல் நடந்ததால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

வடமாநில டிடிஆர் மீது சரமாரி தாக்குதல்... ஓடும் ரயிலில் பரபரப்பு...

திருச்சி | கல்லுக்குழி ரயில்வே குடியிருப்பில் வசித்து வரும், பீகாரைச் சேர்ந்த 35 வயதான அரவிந்த்குமார், திருச்சி ரயில்வே மண்டலத்தில் பரிசோதகராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு சோனி என்பவருடன் திருமணமாகி ஆயுஷ் என்ற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் 'சேது' அதிவிரைவு ரயிலில், அதிகாலை 1.30 மணியளவில் அரவிந்த் குமார் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அந்த ரயிலில் ஏறி பணியில் சேர்ந்தார். இந்த இரயில் திருச்சியில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் வழியில் செல்லும் போது டிக்கெட் பரிசோதகர் அரவிந்துக்கும், பயணி ஒருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | முதலமைச்சரின் கன்னியாகுமரி பயணம்... எதிர்ப்பு தெரிவிக்கும் நாடார்கள்....!!

சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவி பிரிவு அலுவலராக பணியாற்றிவரும் அந்த பயணி, ராமேஸ்வரத்தில் வழிபாட்டை முடித்துவிட்டு இரயிலில் பணிக்கு திரும்புகையில் பரிசோதகருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முத்தியதில் டிக்கெட் பரிசோதனை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரயில்வே டிடிஆர் அரவிந்த் குமார் தன்னை பயணி ஒருவர் குடிபோதையில் தாக்கிவிட்டதாக விழுப்புரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, விழுப்புரத்தில் இருந்து விசாரணைக்காக, இரயில்வே பாதுகாப்பு படை படையினர் திருச்சிக்கு பயணிகளை அழைத்து வந்தனர்.

எஸ்.ஆர்.எம்.யூ துணை பொது செயலாளர் வீரசேகரன் முன்னிலையில் திருச்சி ரயில்வே போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் படிக்க | இதற்கு இரண்டு முதலமைச்சர்கள் பங்கேற்பது என்பது கண்டிக்கத்தக்கது....தமிழ்நாடு சட்டசபையை ஸ்தம்பிக்க வைப்போம்..!!

பின், எஸ்.ஆர்.எம்.யூ தொழிலாளர்கள் ரயில் நிலையம் முன்பு, டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டியும், தாக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்கியதாக கூறப்படும் தலைமைச் செயலக அதிகாரியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் நடந்த இந்த போராட்டத்தால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில், தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சக டிடிஆர்-களும் திருச்சி ஜங்ஷனில் ஆர்பாட்டம் செய்தனர். அப்போது பேட்டியளித்த அரவிந்த் குமார், தான் 8 வருடங்களாக டிடிஆர்-ஆக பணி புரிந்து வருவதாகவும், இது வரை இது போன்ற சம்பவங்கள் நடைபெறாததாகவும் குறினார்.

மேலும், தாக்கப்பட்ட போது, தனக்கு உதவி செய்ய ரயிலில் இருந்த போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததாகவும் குற்றம் சாட்டிய அரவிந்த், தனக்கு நடந்த தாக்குதலை அவர்கள் வேடிக்கை பார்த்ததாகவும் கண்ணீர் மல்க கூறியது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | சென்னை மெரினாவில் பரபர...ஆன்லைன் ரம்மியால் ரூ.16 லட்சம் பணத்தை இழந்த நபர் பலி...!