குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி...! மூளையின் செயல்திறனை அதிகரிக்க விழிப்புணர்வு..!

குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி...! மூளையின் செயல்திறனை அதிகரிக்க விழிப்புணர்வு..!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் புகழ்பெற்ற தனியார் பள்ளியில் இரண்டு வயது முதல் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மூளையின் செயல் திறனை அதிகரிக்க மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்க மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபட விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 3 சக்கர சைக்கிள் இயக்கப் போட்டி நடந்தது.

மேலும், போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு தங்க நாணயங்களும் சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் கும்பகோணம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இந்த விழா ஏற்பாடுகளை தனியார் பள்ளி நிர்வாகம் செய்திருந்தனர். குழந்தைகளின் மூளை செயல்பாட்டை அதிகரிக்க நடத்திய மூன்று சக்கர சைக்கிள் இயக்கப் போட்டியில்  ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்.