குடியிருப்புப் பகுதியில் மோதிக் கொண்ட காட்டெருமைகள்...! வீடியோ வைரல்..!

குடியிருப்புப் பகுதியில் மோதிக் கொண்ட காட்டெருமைகள்...! வீடியோ வைரல்..!
Published on
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இரண்டு காட்டு எருமைகள் சண்டையிடும் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டு எருமைகளின் நடமாட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில், மக்கள் கூடும் இடங்களில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டு காட்டு எருமைகள் குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்தில் ஒன்றுக்கு ஒன்று முட்டி சண்டையிட்டுள்ளது. 

இந்த காட்சியை அப்பகுதியில் இருந்த குடியிருப்பு வாசி ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பகல் நேரத்தில் நடைபெற்ற நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு எருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர வாகன ரோந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com