பேருந்து ஓட்டுநர் கடத்திய 6 பேர் கைது...

பல்லடத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருந்து ஓட்டுநர் கடத்திய 6 பேர் கைது...

திருப்பூர் | பல்லடம் அருகே மகாலட்சுமிநகரில் பேருந்தில் வாடிக்கையாக வந்த பெண்ணுக்கு திருமணமான பின்பும் தவறான தொடர்பு வைத்திரிந்ததாக கூறி தனியார் பேருந்தின் ஓட்டுனர் கடத்தி சரமாரியாக தாங்கியதில் பேருந்து ஓட்டுநர் ஈஸ்வரன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி. சொகுசு கார் பறிமுதல் ஆறு வாலிபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து போலீசார் கூறுகையில் பல்லடம் அருகே அருள்புரம் பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி மகன் ஈஸ்வரன் 27. இவர் தனியார் பஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அந்த பஸ்ஸில் வாடிக்கையாக வரும் பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணமான அந்தப் பெண்ணிடம் பழகுவதை நிறுத்தக் கோரி அவரது தம்பி மற்றும் உறவினர்கள் ஈஸ்வரனை எச்சரித்து வந்தனர்.

மேலும் படிக்க | தாயுடன் சேர்ந்து தந்தையை அடித்து கொன்ற மகன்...

இந்நிலையில் நேற்று மாலை பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் நண்பரை சந்திக்க ஈஸ்வரன் வந்துள்ளார். அப்போது அவரைத் தேடி வந்த சிலர் அவரிடம் பேச வேண்டும் என கூறி அவர்கள் வந்திருந்த காரில் ஏறச் சொன்னபோது ஈஸ்வரன் மறுத்துள்ளார். இதனால் அவரை தாக்கி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றுள்ளனர். இதனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து  பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து உஷாரான போலீசார் பல்லடம் நால் ரோட்டில் வைத்து அந்த காரை மடக்கி பிடித்தனர் பின்பு அதிலிருந்த ஈஸ்வரனை மீட்டனர். அவரை கடத்திய  செஞ்சேரிமலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் 24, தமிழ் 23,சபரிநாதன் 22, வினோத்குமார் 25,சுந்தர் 24,அருண்குமார் 24,நித்திஷ் 25 உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.பல்லடம் அருகே நல்லிரவில் தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கி காரில் கடத்தி சென்று அதன்பின் பல்லடம் போலீசாரால் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள்...