இருந்தாலும் இவனுங்க அலப்பறை தாங்க முடியலப்பா!!!!!!ஜோடி இல்லாத ஆண்கள் முரட்டு சிங்கிள் என கருப்பு உடை அணிந்து பூங்காவில் வளம்.......

இருந்தாலும் இவனுங்க அலப்பறை தாங்க முடியலப்பா!!!!!!ஜோடி இல்லாத ஆண்கள் முரட்டு சிங்கிள் என கருப்பு உடை அணிந்து பூங்காவில் வளம்.......

காதல் மாதம் 

காதலின் மாதம் என்றாலே அது பிப்ரவரி தான். ஏனென்றால் அனைவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் காத்திருக்கும் லவ்வர்ஸ் டே 'பிப்ரவரி 14' இன்று ரோஸ் டேயில் தொடங்கி காதலர் தினம் வரை ஒரு வாரம் கொண்டாடப்படும். இந்த காதல் கொண்டாட்டம் காதலர்களுக்கு ஒரு திருவிழா போல் இன்று இருக்கிறது. 

காதலர் தின எதிர்ப்பு போஸ்டர்களால் ராமநாதபுரத்தில் பரபரப்பு!!! அப்படி என்னதான் இருக்கு காதலில் ?

இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தருமபுரி பேருந்து நிலையத்தில் உள்ள பூக்கள் சந்தையில்  ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் வாலிபர்கள் உள்ளிட்டோர்.  தங்களுடைய காதலை பரிமாறும் நோக்கத்தோடு ரோஜாப்புக்களை வாங்கி சென்றனர். காதலர்கள் காதலிக்கு  நகராட்சி பூங்கா, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில்  பரிசுகளை கொடுத்து அதனுடன் ஒற்றை ரோஜா மலரை கொடுத்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினர் இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள்    நாங்கள் யாரையும் காதலிக்கவில்லை.அதனால் கருப்பு உடை அணிந்து முரட்டு சிங்கிள் என  கருப்பு உடை அணிந்து பூங்காவில் வளம் வந்த கல்லூரி மாணவர்கள்.

 

கருப்பு உடையில் வளம்

காதலை நண்பர்களுடன் அன்பை பரிமாறிக் கொள்ள காதலர் தினத்தை கொண்டாடுகிறோம் என்று உற்சாகத்தோடு கருப்பு உடையில் காதலர்கள் மத்தியில் வலம் வந்தனர்.