முல்லைப் பெரியார் அணையை மத்திய பாதுகாப்பு குழுவினர் ஆய்வு...

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியார் அணையை மத்திய பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

முல்லைப் பெரியார் அணையை மத்திய பாதுகாப்பு குழுவினர் ஆய்வு...

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

பின் கண்காணிப்பு குழுவில் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநில தொழில் நுட்ப வல்லுனர்களையும் சேர்க்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்தும் தற்போது இந்த தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜய் சரண் மற்றும் தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழுமதலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் ஆய்வுக்கு சென்றனர்.

மேலும் படிக்க | 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் - 3 நிறுவனங்கள் தேர்வு

மேலும், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் வேணு, கேரள நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை பார்வையிடுவதற்காக குமுளியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இருந்து அணைக்குச் செல்லும் வல்லக்கடவு வழியாக தரைவழி மார்க்கமாக சென்றனர்.

முல்லைப் பெரியார் அணைக்கு சென்று அணைப்பகுதி, கேளரி பகுதி அணையின் நீர்க்கசிவு சட்டர் பகுதி ஆய்வு செய்து அதன் பின்னர் பேபி அணையை ஆய்வு செய்ய உள்ளனர். முல்லைப் பெரியாறு அணையில் சுமார் காலை 11 மணியளவில் ஆய்வை மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | திடீரென உள்வாங்கிய விவசாய நிலம்.... ஆராய்ச்சியில் மூத்த புவியியலாளர்கள்!!