செங்கல்பட்டு : 3 ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் கண்டெடுப்பு...!

செங்கல்பட்டு : 3 ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் கண்டெடுப்பு...!

செங்கல்பட்டு மாவட்டம் அருகே இராணுவ பயிற்சி முகாம் செயல்பட்டு வந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட  3-ராக்கெட் லாஞ்சர்களை தொடர்ந்து மேலும் 3 வேறுரக வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான இந்த ராக்கெட் லாஞ்சர்களை சோதனை செய்து எடுத்து செல்ல இந்திய ராணுவத்தை சேர்ந்த கமாண்டோ அதிகாரிகள் வராததால், மறைமலைநகர் காவல்துறை சார்பில் அந்த மூன்று ராக்கெட் லாஞ்சர்ளை மலைப் பகுதியிலேயே பள்ளம் தோண்டி அதனுள் வைத்து சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அதேபகுதியில் வெடித்தும் வெடிக்காத நிலையில் ராக்கெட் லாஞ்சர் அல்லாத வேறு ரகத்தை சேர்ந்த 3 வெடிபொருட்கள் கிடக்கின்றன. இந்த மலையை சுற்றிலும் இதுபோன்று பலவிதமான வெடிபொருட்கள் சிதறி கிடக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. மேலும் ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அபாயகரமான தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அதற்கான விளம்பர பலகை அமைக்க  உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : உள்ளாட்சி தினத்தில் மக்கள் குறைகளை நேரில் கேட்டறிகிறார் முதலமைச்சர்...