தரம் உயர்த்த 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு... அரசாணை வெளியீடு...

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையை தரம் உயர்த்த 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தரம் உயர்த்த 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு... அரசாணை வெளியீடு...
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் : அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் 1969ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 290 படுக்கை வசதிகளுடன் இயங்கி வரும் இம்மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் தற்போது அதற்காக நூறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, 750 படுக்கை மற்றும் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகவங்கி மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் நிதி உதவியுடன் மருத்துவமனையை தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com