சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா...! கொடியேற்றத்துடன் தொடங்கியது...!

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா...! கொடியேற்றத்துடன் தொடங்கியது...!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் கருவரை முன்பு உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சுதபாத தீட்சிதர் வேத மந்திரங்கள் முழங்க கொடியை ஏற்றினார்.

அடுத்த மாதம் 5 ஆம் தேதி தேரோட்டமும் 6ஆம் தேதி தரிசன விழாவும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யவுள்ளதால் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிதம்பரம் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : முழுவதும் இளம் வீரர்களின் படையானது இந்திய டி20 கிரிக்கெட் அணி..! ரோகித், கோலி, ராகுல் யாரும் இல்லை..!