சிதம்பரம் : தமிழக பாஜக தலைவருக்கு எதிராக உருவ பொம்மையை எரித்து போராட்டம்...!

சிதம்பரம் : தமிழக பாஜக தலைவருக்கு எதிராக உருவ பொம்மையை எரித்து போராட்டம்...!

சிதம்பரம் அருகே புவனகிரியில் திமுகவினர் போராட்டம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை பற்றி அவதூறாக விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் இன்று அவரது உருவ பொம்மையை எரித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 சிதம்பரம் அருகே புவனகிரி கிழக்கு ஒன்றிய நகர திமுக சார்பில் புவனகிரி அண்ணா சிலை அருகில் ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், புவனகிரி பேரூராட்சி தலைவர் கந்தன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஏராளமான திமுகவினர், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் அண்ணாமலையின் உருவ பொம்மையை  எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீயை அணைத்த்து கட்டுப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க : என்.ஐ.ஏ அலுவலகம் வேண்டுமாம்! மாநில உரிமைகளை கைவிடுகிறதா அதிமுக?