
மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றங்கள் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணியளவில் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நீதிமன்றத்தின் கூடுதல் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளனர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.
மேலும் காணொலிக் காட்சி மூலம் மயிலாடுதுறை மாவட்ட அமைர் நீதிமன்றத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு சென்றுள்ளார்.
இதையும் படிக்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திடம் விசாரணை செய்யவுள்ள காவல்துறை...!!