பஸ் டிரைவர் கண்டக்டருக்கு இடையே மோதல்... ஓட்டம் பிடித்த மக்கள்...

ஆலங்குளம் பேரூந்து நிலையத்தில் மினி பேருந்து ஒட்டுனர் - நடத்துனர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பயணிகள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர்.
பஸ் டிரைவர் கண்டக்டருக்கு இடையே மோதல்... ஓட்டம் பிடித்த மக்கள்...
Published on
Updated on
1 min read

தென்காசி | ஆலங்குளம் பேருந்து நிலையத்திலிருந்து சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஒரே பகுதிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் பேருந்தை யார் முதலில் இயக்குவது என்றும் பயணிகளை ஏற்றி செல்வது குறித்தும், மினி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

அவ்வப்போது மினி பேருந்துகளுடன்  ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்படுத்தி மோதலிலும் ஈடுபட்ட வந்த சம்பவமும் இப்பகுதியில் அரங்கேறியுள்ளது.  இந்த நிலையில் இன்று மினி பேருந்துகளை பேருந்து நிலையத்திலிருந்து யார் முதலில் இயக்குவது என்ற போட்டியால் மினி பேருந்து ஓட்டுனர்களிடையே மோதல் ஏற்பட்டது.

வாக்குவாதமாக துவங்கிய இந்த மோதல் பின்னர் கை கலப்பாக உருமாறி அடிதடியில் இறங்கி பேருந்து நிலையத்தை கலவர பூமியாக காட்சியளிக்கும் வகையில் ஓடி ஓடி அடிதடியில் இறங்கி மோதலில் ஈடுபட்டனர். மினி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இடையே பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட மோதலால் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

தினந்தோறும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் மினி பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கின்ற வகையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மினி பேருந்து மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் பஸ் பயணிகளும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com