பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி...! தொடங்கி வைத்த ஆட்சியர்...!

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி...! தொடங்கி வைத்த ஆட்சியர்...!
Published on
Updated on
1 min read

நவம்பர் 25 தேதியான இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் உலக விழிப்புணர்வு நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகரில், பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் அனைத்து பாகுபாடுகளையும் ஒழிக்கும் விதமாக சமூக நலத்துறை மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் இணைந்து பேரணியை தொடங்கினர். இதில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பதாகைகளை ஏந்திக்கொண்டு பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பேரணி பதாகைகளில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வசனங்களும், பெண்களுக்கெதிரான தடுப்பு சிறப்பு அழைப்பு எண்களும், குழந்தை திருமணம் ஒரு குற்ற செயல் எனவும்  குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி அரசு மருத்துவமனை பகுதியில் சென்று முடிவடைந்தது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com