சேதமடைந்த சாலை...! திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...!

சேதமடைந்த சாலை...! திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...!

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள்  மற்றும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். 

இந்த நிலையில் சேதம் அடைந்த  சாலையை விரைந்து சீரமைக்க கோரி எல்.என்.புரம் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பண்ருட்டி - சென்னை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க : வைகைபுயலின் நாய் சேகர் ரிட்டன்ஸ்...! வெளியானது ஃபர்ஸ்ட் சிங்கில் பாடல்...!