செவி திறன் சவாலுடைய மாற்றுத்திறனாளி ரயிலில் மோதி பலியானதால் பரபரப்பு...

கூத்தூர்  இரயில்வே கேட் பகுதியில் சரக்கு இரயில் மோதி மாற்றுத்திறனாளி பலியானதை அடுத்து இரயில்வே போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செவி திறன் சவாலுடைய மாற்றுத்திறனாளி ரயிலில் மோதி பலியானதால் பரபரப்பு...
Published on
Updated on
1 min read

நாகப்பட்டினம் | கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் கீழத் தெருவைச் சேர்ந்த 61 வயதான பக்கரிசாமி காது கேளாத மாற்றுதிறனாளி. இவர் கடைக்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு கூத்தூர் ரயில்வே கேட் அருகே ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது திருவாரூரில் இருந்து நாகை நோக்கி  சரக்கு ரயில் ஒன்று வந்துள்ளது.

இவருக்கு காது கேளாத நிலையில் ரயில் வருவதை கவனிக்காமல் சென்ற நிலையில் இரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த  அவர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நாகை இருப்பு பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சா.ராஜூ தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நாகை அருகே ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்ற நபர் மீது சரக்கு ரயில் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com