ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரிக்கை...! வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடைக்காரர்கள்...!

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரிக்கை...! வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடைக்காரர்கள்...!

திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தினமும் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் ஆக்கிரமிப்பு கடைகாரர்கள், உழவர் சந்தையில் உரிமையாளர்களிடம் இருந்து காய்கறிகளை குறைந்த விலையில் வாங்கி உழவர் சந்தைக்கு வெளியே அதிக விலைக்கு விற்று வருவதாக உழவர் சந்தை விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனால் பொதுமக்கள்  பாதிக்கப்படுவதாகவும், ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து பாதிப்பும்  ஏற்படுவதாகவும், தங்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக உழவர்சந்தை விவசாயிகள் சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது நகராட்சி அதிகாரிகள் விரைவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் செய்யபடும் என தெரிவித்திருந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் இன்று உழவர் சந்தைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். மேலும் தொடர்ந்து இங்கு பெட்டிகளை வைக்கக்கூடாது எனவும் தாங்களாக அகற்றிக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர். இல்லை என்றால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தனர்.அப்போது ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள், ரயில்வே பீட்டர் சாலையில் பெட்டிகளை வைத்து வாழ்வாதாரத்தை நடத்தி வந்த போது, சாலை விரிவாக்க பணிகளுக்காக நகராட்சி நிர்வாகத்தினர், உழவர் சந்தை முன்பாக மாற்றிக்கொள்ள கூறியுள்ளனர். தற்போது மீண்டும் மாற்றிக்கொள்ள சொல்வதால், ஆக்கிரமிப்பு கடைக்காரர்களும் நகராட்சி அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.