சொர்க்கவாசல் திறப்பை நேரில் காண கூட்டம் கூட்டமாக திரண்ட பக்தர்கள்...

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் இன்று வைணவ கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதனை காண திறளான பக்தர்கள் குவிந்தனர்.

சொர்க்கவாசல் திறப்பை நேரில் காண கூட்டம் கூட்டமாக திரண்ட பக்தர்கள்...

அறியலூர் | பிரசித்திபெற்ற கோதண்டராசாமி திருக்கோவிலில் இன்று, மலர்களால் அலங்கரிக்கபட்ட பெருமாள் சொர்க்கவாசல் திறக்கபட்டு அதன் வழியாக வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மகா தீபாரதணை காண்பிக்கபட்டது.

கோவை | தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில், பெருமாளுக்கு பல சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அர்ச்சகர்களின் வேத பாராயனங்களுடன், மலையப்பசாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் பல வண்ண மலர்கள் மற்றும் பழங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பரமபத வாசல் வழியாக வலம் வந்து சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும் படிக்க | மாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு...

கடலூர் | திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், 108 வைணவ தேவஸ்தலங்களில் முக்கியமான ஒன்றாக இருக்க, அதிகாலை 3:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்காழி மாத பூஜைகள் நடைஒபெற்றது. பின், 5:40 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

சிதம்பரம் | முக்கிய வைணவ தலமான தில்லை கோவிந்தராஜ பெருமாள் பல்வேறு பூஜைகளுக்குப் சொர்க்கவாசல் திறந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தில்லை கோவிந்தராஜ பெருமாளை வழிபட்டனர்.

மேலும் படிக்க | 108 வைணவ தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு..! அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் தரிசனம்..!

தர்மபுரி | கோட்டை பரவாசு தேவ சுவாமி கோவில் சொர்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. பூக்களால் அலங்கரிக்கபட்ட பல்லக்கில் பரவாசுதேவர் தம்பதி சமித பரமபத சொர்க வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், லட்டுக்கள் பிரசாதமாகவும், அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

திண்டுக்கல் | பிரசித்தி பெற்ற  மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பெருமாள் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று அதிகாலை விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஈரோடு | 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றதுஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதனுக்கு அபிஷேக ஆராதனைகள் தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தம், திருப்பாவை, ஆண்டாள் பாசுரங்கள் பாடி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதிகாலை 5:45 மணிக்கு சொர்க்கவாசல் நடை திறக்கப்பட்டது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | திருப்பதி கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு - மகாராஷ்டிரா முதலமைச்சர், தமிழ்நாடு அமைச்சர் தரிசனம்..!