நில மோசடி வழக்கில் வட்டாட்சியர் கைது... சிபிசிஐடி அதிரடி...

கடந்த அதிமுக ஆட்சியில் 182 ஏக்கர் அரசு நிலம் பட்டா மாறுதல் செய்த மோசடி வழக்கு தொடர்பாக பெரியகுளம் வட்டாட்சியரை சிபிசிஐடி காவல்துறையிணர் கைது செய்தனர்.

நில மோசடி வழக்கில் வட்டாட்சியர் கைது... சிபிசிஐடி அதிரடி...

தேனி : வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 182 ஏக்கர் அரசு நிலத்தை  'அ' பதிவேடு மூலம் திருத்தம் செய்து அதிமுக முன்னாள் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அண்டப்பிரகாசம் என்பவருக்கு பட்டா மாறுதல் செய்ப்பட்டது.

ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த அன்னபிரகாசம் இந்த வழக்கு தொடர்பாக தற்போதைய ஆட்சியில் கட்சியிலே பொறுப்பிலிருந்து அடிப்படை உறுப்பினர் இருந்தும் நீக்கப்பட்டார்.

மேலும் படிக்க | பொதுக்கூட்டத்தில் மோதல்... ஒருவர் பலி...

இந்த மோசடி வழக்கானது சிபிசிஜடிக்கு மாற்றப்பட்டு மோசடி தொடர்பாக  நில அளவயர்கள் கோட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் மற்றும் தனிநபர் என 18 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து இது வரை 6 நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நிலமோசடி நடைபெற்ற காலகட்டத்தில் பெரியகுளம் வட்டாட்சியராக பணிபுரிந்த கிருஷ்ணகுமார் என்பவரை இன்று சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரசு நிலமோசடி வழக்கில் தற்போது தாசில்தார் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | மூன்றாவது முறையாக மீண்டும் தோல்வியடைந்ததா ஆர்ட்டெமிஸ்?!!!

மேலும் இந்த வழக்கின் முதல் குற்றவாளியான அதிமுக முன்னாள் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அண்ணன் பிரகாசம் கைது செய்யப்பட்டு ஜானில் வெளிவந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணியினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

மேலும் படிக்க | மருத்துவ துறையில் முதலிடத்தில் தமிழகம்... முதலமைச்சர் பெருமிதம்!!!