நெருங்கும் தீபாவளி.. அலைமோதும் மக்கள் கூட்டம்... பாதுகாப்பை உறுதி படுத்த சிசிடிவி கேமரா கட்டாயம் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்

நடைபாதை வியாபாரிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் எந்தவிதமான இடையூறும் இல்லாமலும், நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்யாமலும் இருக்க அறிவுறுத்தல்.

நெருங்கும் தீபாவளி.. அலைமோதும் மக்கள் கூட்டம்... பாதுகாப்பை உறுதி படுத்த சிசிடிவி கேமரா கட்டாயம் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்

போக்குவரத்து துறை ஆலோசனைக் கூட்டம்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு புரசைவாக்கம் ஜவுளி கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்து உதவி ஆணையர் கிறிஸ்டோபர் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் பாண்டி வேலு வியாபாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினர். 

அறிவுறுத்தப்பட்டுள்ள விதிமுறைகள்

தங்கள் கடைகளுக்கு கொண்டு வரும் பொருட்களை இரவு நேரத்தில் கொண்டு வருமாறும், அதேபோன்று கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் கடையின் முன்னே நிறுத்தக்கூடாது என்றும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கடை வியாபாரிகள் அவர்களுடைய கடைக்கு முன் உள்ள நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கொரோனா தொற்று வழிகாட்டுதல்படி முகக் கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பை உறுதிப்படுத்த சிசிடிவி கேமரா

புரசைவாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் எந்தெந்த பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தலாம், அதேபோன்று எந்தெந்த பகுதியில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம் எனவும் வழிகாட்டு பலகையும் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல்துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள்...! நாளை நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டம்

குறிப்பாக கடைக்கு உள்புறமாக சிசிடிவி கேமரா இருந்தாலும் வெளிப்புறமாக நிச்சயம் சிசிடிவி கேமராக்களை அமைக்குமாறு போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இந்த சிசிடிவி கேமராவின் மூலம் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணத்தினால் கூடுதல் சிசிடிவி கேமராக்களை அமைக்குமாறு போக்குவரத்து காவல்துறை சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.