குடிநீர் தொட்டியில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட போதை ஆசாமி...

குடிநீர் தொட்டியில் நாற்றம் அடித்ததால் விசாரித்த போது ஒரு சடலம் தொட்டியில் கிடைத்துள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குடிநீர் தொட்டியில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட போதை ஆசாமி...
Published on
Updated on
1 min read

விருதுநகர் | அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி தேங்காய் நந்தவனம் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி என்பவர் மகன் முத்துமணி(43) இவர் கட்டிட தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் முத்துமணி பாலையம்பட்டி புறவழிச்சாலை அருகே செல்வம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் சடலமாக மிதப்பதாக நகர் காவல் நிலைய போலீசருக்கு தகவல் கிடைத்தது.

தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் முத்துமணியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது முத்துமணியின் கழுத்திலும் முகத்திலும் உடலிலும் பல வெட்டு காயங்கள் இருப்பது தெரியவந்தது.

எனவே முத்துமணி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள்  நேரில் ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com