அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் வாபஸ்...

அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாப்பஸ் பெறுவதாக தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் மாநில தலைவர் நிஜலிங்கம் பேட்டியளித்துள்ளார்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் வாபஸ்...

தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாளை கலவரையற்ற போராட்டம் அறிவித்திருந்தது. கடந்த 2ம் தேதி இரண்டு தண்ணீர் லாரிகளை பல்லாவரம் வட்டாட்சியர் சிறைபிடித்து தண்ணீர் எடுக்க உரிய ஆவனம் பெற வேண்டும் என கூறி லாரியை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.  

மேலும் படிக்க | ஏழை மாணவியின் மருத்துவ கனவு... அரசு உதவிக்கரம் நீட்டுமா...?

லாரியை சிறை பிடித்ததை கண்டித்தும் தண்ணீர் எடுக்க அரசிடமிருந்து அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி நாளை காலை முதல் சென்னையில் உள்ள 15 ஆயிரம் தண்ணீர் லாரிகள் ஓடாது என மாநில தலைவர் நிஜலிங்கம் போராட்டத்தை அறிவித்தார். 

தகவல் அறிந்த அதிகாரிகள் தண்ணீர் லாரி சங்கத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பரிந்துறையின் பேரில் தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் லாரி சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  

மேலும் படிக்க | அரசு பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்கள் தர்ணா...! மதுபானக்கடையை அகற்ற கோரி போராட்டம்...!

அப்பொழுது சிறை பிடித்த இரு லாரிகளை விடுவித்து பின்னர் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்க ஆவனம் செய்வதாக கூறி போராட்டத்தை திரும்பபெற கேட்டுக்கொண்டதின் பேரில் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிவித்த போராட்டத்தை வாப்பஸ் பெற்றனர். 

தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் லாரிகள் போராட்டத்தில் ஈடுபட இருந்த நிலையில் அரசு அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வப்பஸ் பெருவதாக மாநில தலைவர் நிஜலிங்கம் பேட்டியளித்தார்.

மேலும் படிக்க | தவறான ஊசியால் சிறுமி மரணம்! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்!