தொடர் விடுமுறையின் எதிரொலி...! ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!

தொடர் விடுமுறையால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையின் எதிரொலி...! ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!

பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை என தொடர் விடுமுறையை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகளின் வரவு அதிகமாக இருந்த நிலையில் இன்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவே இருந்து வருகிறது. இன்று  காலை முதலே ஏற்காட்டில் உள்ள முக்கிய இடங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் மகிழ்ந்தனர்.  

மேலும் ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள், அதிக அளவில் விரும்பி செல்லும் இடங்களில் ஏற்காடு படகு இல்லமும் ஒன்று. அங்கு படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் படகு சவாரி செய்ய வந்தவர்கள் நீண்ட வரிசையில்  நின்று வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

அதுமட்டுமல்லாமல், ஏற்காட்டில் உள்ள லேடி சீட், ரோஜா தோட்டம் பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோயில், பொட்டனிக்கல் கார்டன், கரடியூர் வியூ பாயிண்ட், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் சென்று கண்டு மகிழ்ந்தனர். அதிக படியான சுற்றுலா பயணிகளின் வருகையால் ஏற்காட்டின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.