'சம வேலைக்கு சம ஊதியம்' - தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்...

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்று வரும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் 5-ஆம் நாளாக நீடிக்கிறது.
'சம வேலைக்கு சம ஊதியம்' - தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்...
Published on
Updated on
1 min read

தமிழக அரசு பள்ளிகளில் 2009-ஆம் ஆண்டு மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டதால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று 5-ஆம் நாளாக இன்று நீடித்து வருகிறது.

ஏற்கனவே 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒரு ஆசிரியர் மயக்கம் அடைந்தார். தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தால், பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com