விபத்தில் தூக்கி வீசப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் பலி...

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் முன்னாள் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் தூக்கி வீசப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் பலி...

தென்காசி | சங்கரன்கோவில் அருகே உள்ள மலையான்குளத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கணபதி(60) என்பவர் சங்கரன்கோவில் இருந்து மலையாங்குளம் செல்வதற்காக சென்று கொண்டிருந்தபோது வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்க் நோக்கி இரு சக்கர வாகனத்தை திருப்பியுள்ளார்.

அப்போது தச்சநல்லூர் பகுதி அழகனேரியை சேர்ந்த முத்துகுமார் என்பவர் தனது குடும்பத்துடன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக சென்று விட்டு இரண்டு கார்களில் குடும்பத்தாருடன் வந்து கொண்டிருந்த நிலையில், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது.

மேலும் படிக்க | பட்டாசு ஆலை வெடிவிபத்து... அண்ணாமலை ட்விட்டர் பதிவு...தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!

அதில் இருசக்கர வாகனத்தில் வந்த முன்னாள் ராணுவ வீரர் கணபதி தூக்கி வீசப்பட்டதில் முன்னாள் ராணுவ வீரர் கணபதி சம்பவ இடத்தில் பலியானார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  நகர காவல்துறையினர் அவரது உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

முன்னாள் ராணுவ வீரர் கணபதி மீது கார் மோதி தூக்கி வீசப்படும் நெஞ்சை பதபத வைக்க கூடிய சிசிடிவி கட்சியானது  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ருவாண்டா நாட்டு இளைஞர் கைது...


உலக அளவில் முதன் முறையாக சூரிய ஒளி மின் வசதி மூலம் செயல்படும் நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதன இரண்டடுக்கு பேருந்து நிழற் கூடம் கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தருமபுரியில் திறக்கப்பட்டுள்ளது.
    
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 58 இலட்ச ரூபாய் மதிப்பில்  கட்டப்பட்ட தமிழ்நாட்டில் முதல் முறையாக சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் அதி நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதன இரண்டடுக்கு பேருந்து நிழற் கூடம் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு திறந்து வைக்கப்பட்டது.

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சாந்தி இந்த நிழற் கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நிழல் கூடத்தில் உள்ள வசதிகளை பார்வையிட்டார். இந்நிழல் கூடத்தில் குளிர்சாதன வசதியுடன் பயணிகளுக்கு இரண்டடுக்கு தளத்தில் இருக்கை வசதி. தானியங்கி பரிவர்த்தனை எந்திரம், ஏடிஎம் மையம், சிறப்பு அங்காடி, தானியங்கி சூரிய மின் சக்தி நிலையம், 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி,  24 மணி நேரமும் இலவச வைஃபை வசதி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 

மேலும், அதிநவீன வர்த்தக விளம்பர எல்இடி பலகை. குளிர்சாதன பாதுகாக்கப்பட்ட தாய் சேய் பாலூட்டுஅறை. மினி நூலக வசதி, அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்த வாசகங்கள் தருமபுரி பண்பலை வானொலியை கேட்கும் வசதி, தொலைக்காட்சி பெட்டி, செல்பி பாயிண்ட். கார்டன் சீட் அவுட். செல் சார்ஜிங் பாயிண்ட் இவை அனைத்தும் அது நவீன நிழல் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் இத்தனை வசதிகளும் உள்ள பேருந்து நிழற் கூடம் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:ஒடிசா ரயில் விபத்து: "தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது" திருமாவளவன் சாடல்!

பவானிசாகர் அணையில் ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த கோரி அரசு கவனத்தை ஈர்க்க சுமார் ஆயிரக்கணக்கானோர் பவானிசாகர் பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மண்ணாலான அணை என்ற பெருமை கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்திற்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதியில் உள்ள ஆலைகளில் இருந்து திறந்து விடப்படும்‌ ரசாயன கழிவு நீர் பவானிசாகர் அணையில் கலந்து அணையில் உள்ள நீர் கருப்பு நிறத்தில் மாறி உள்ளது. 

இதனால் பவானிசாகர் அணையில் இருந்து விவசாயத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் திறந்து விடப்படும் தண்ணீரின் மூலம் விவசாய பயிர்கள் நாசமாகுவதாகவும், மேலும் இந்த பவானி ஆற்று குடிநீரை பருகும் பொதுமக்களுக்கு பல்வேறு வியாதிகள் ஏற்படுவதாகவும் கூறி உடனடியாக ரசாயன கழிவு நீரை பவானி ஆற்றில் திறந்து விடும் ஆலைகளை கண்காணித்து அந்த ஆலைகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

இருப்பினும் அதில் எந்தவொரு பலனும் இல்லாததால் பவானி நதிநீரை பாதுகாக்க பல்வேறு கட்சியினர், விவசாயிகள், தன்னார்வலர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இணைந்து பவானி நதி‌நீர் பாதுகாப்பு குழு என்ற குழுவை உருவாக்கி அரசு கவனத்தை ஈர்க்க இன்று போராட்டம் நடத்த முடிவு செய்து கடந்த ஒரு மாதங்களாக பொதுமக்கள் மற்றும் அனைத்து சங்கத்தினர், தன்னார்வலர்கள் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுத்து துண்டு பிரசுரம் வழங்கி வந்தனர்.

அதன் அடிப்படையில் அரசியல் கட்சியினர், விவசாயிகள், தன்னார்வல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் சுற்றுச்சூழல் தினமான இன்று பவானிசாகர் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏ.எஸ்.பி ஐமன் ஜமால் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க:"ஓரிரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும்" உதயநிதி!

அரசின் நேரடி  நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு 100, ரூபாய் லஞ்சம் வாங்கும் தி.மு.க ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது மகனை கண்டித்து சமூக ஆர்வலர் சென்னை கோட்டையை நோக்கி சைக்கிளில் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஐயனேரி பஞ்சாயத்தில் வசிப்பவர் எஸ்.ரஜினி. இவர் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ஊழல் நடைபெறுவதை கண்டித்து  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மூலம் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்யும் கோபிநாத் மற்றும் ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனி அவரது மகன் வினோத் ஆகியோர்  இணைந்து ஒரு மூட்டைக்கு 100 ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டை ரஜினி முன்வைத்துள்ளார்.

ஆனால் அந்த ஆர்ப்பாட்டம் நடந்த இரண்டு நாட்கள் கழித்து ரஜினியை தி.மு.க ஒன்றிய செயலாளர் மகன் வினோத் மற்றும் ஆறு பேர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ரஜினி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆர்.கே .பேட்டை காவல் நிலையத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர் பழனி மகன் வினோத் மற்றும் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்த ஆர்.கே.பேட்டை போலீசார், தி.மு.க ஒன்றிய செயலாளர் மகன்  வினோத் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்யவில்லை. மேலும், நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள கோபிநாத் அந்த அரசு அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

 

இந்நிலையில் லஞ்சம் வாங்குவதை தட்டிக்கேட்ட சமூக அலுவலர் ரஜினி தாக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருத்தணி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு சென்னை கோட்டையை நோக்கி 150 கிலோமீட்டர் சைக்கிளில் தேசியக் கொடியுடன் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

சமூக ஆர்வலர் ரஜினி, சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து திமுக ஒன்றிய கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு அளிக்க செல்வதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தில் ஆஜர்!!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் திருமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். 

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே 22 அன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு பல்வேறு போராட்டக் குழுவினர் மீது காவல் துறையினரால் பல்வேறு பொய்வழக்குகள் பதியப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியை சேர்ந்த அக்ரி பரமசிவன் என்பவர் மீது புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை அவர்களால் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

சம்மன்கள் அளித்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால்  - பிடிவாரண்ட்

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கானது தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையானது கடந்த 2020 முதல் நடைப்பெற்று வரும் நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த திருமலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக பலமுறை சம்மன்கள் அளித்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால்  (திருநெல்வேலி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) திருமலை) எதிராக தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஆர்.செல்வகுமார் கடந்த மார்ச் மாதம் பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

 

மேலும் படிக்க | வருவாய்த்துறை அலுவலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கோஷங்கள்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் திருமலை மீது ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை, சிபிஐ வழக்கு விசாரணை, மனித உரிமைகள் வழக்கு விசாரணை, தாழ்த்தப்பட்டோர் ஆணைய வழக்கு விசாரணை மற்றும் தூத்துக்குடி நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை தற்போது துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு குறித்து தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

அக்டோபர் மாதம்  திருமலையை சஸ்பெண்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் திருமலையை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் முதன் முறையாக கொல்லிமலையில் ஹீமோகுளோபினோபதி நோய் கண்டறியும் பரிசோதனை முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் எல்லகிராய்பட்டி கிராமத்தில் தமிழ்நாட்டின் முதன்முறையாக ஹீமோகுளோபினோபதி, தலசீமியா மற்றும் ரத்த சோகை உள்ளிட்ட நோய்களை கண்டறியும் பரிசோதனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதற்கு முன்னதாக அப்பகுதி மலைவாழ் மக்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஹீமோகுளோபினோபதி பரிசோதனை செய்து கொண்டால் ரத்தம் சர்ந்த நோய்களை கண்டறிவது மற்றும் அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

மேலும், மலைவாழ் மக்கள் நெருங்கிய உறவினர்களை திருமணம் செய்வதால் ரத்தம் தொடர்பான குறைபாடுகள் ஏற்படுவதாகவும் அதற்காக ரத்தம் தொடர்பான நோய்களை கண்டறியும் வகையில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று அவர்களின் ரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்து 1 நிமிடத்திற்குள்ளாகவே முடிவுகளை கண்டறிய முடியும் எனவும் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

இதனையடுத்து,  இன்று தொடங்கப்பட்ட பரிசோதனை முகாமில் ஆண்கள், பெண்கள் என முதற்கட்டமாக 10 மலைவாழ் மக்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்து உடனடியாக 1 நிமிடத்தில்  முடிவுகளை தெரிவித்தது குறிப்பிட்டத்தக்கது.

இதையும் படிக்க:ஆசிரியர் தேர்வு வாரியம் உறங்குகிறதா? அன்புமணி கேள்வி!