புழல் சிறையில் அடைபட்ட போலி வழக்கறிஞர்...

சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் கைதியைப் பார்க்கச் சென்ற போலி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைபட்ட போலி வழக்கறிஞர்...
Published on
Updated on
1 min read

சென்னை | மத்திய புழல் சிறையில்  சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளை வழக்கு சம்பந்த வழக்கறிஞர்கள் சந்தித்து பேசுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை ராமாபுரம் பெரியார் சாலையை சேர்ந்த  சதீஷ்குமார் (வயது 38) என்ற வழக்கறிஞர்  கைதியைப் பார்க்க வந்திருந்தார்.

அப்போது அவரின் செய்கைகளை பார்த்த சிறை காவலர்கள் சந்தேகம் அடைந்து அவரின் வழக்கறிஞருக்கான அடையாள அட்டையை பரிசோதித்தனர். அதில் அவர்  வழக்கறிஞர் இல்லை என்பதும் போலியான அடையாள அட்டை என்பதும் தெரிய வந்தது.

பின்னர்  சிறைத்துறை அதிகாரிகள் சதீஷ்குமாரின் மீது  புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவரை ஒப்படைத்தார்கள். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் சம்பந்தப்பட்ட நபரை தீவிரமாக விசாரணை மேற்கொண்டத்தில் ,அவர் 2013 ஆம் ஆண்டு திருவேற்காட்டில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது.

அதன் பின்னர் அவரிடமிருந்த போலி வழக்கறிஞர் அடையாள அட்டையை கைப்பற்றி இவர் வழக்கறிஞர் என்ற போர்வையில் இது போல் எங்கெங்கு மோசடி செய்துள்ளார் என்பது பற்றியும் போலீசார் விசாரணை செய்த போலீசார் இவர்மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com