மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு...

சூளகிரி அருகே கால்நடைக்காக புல் அறுத்தபோது மின்சாரம் தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு...

கிருஷ்ணகிரி | சூளகிரியை அடுத்த பேரிகை அருகே அமைந்துள்ள கொரகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (38), இவர் காய்கறிகளை வாங்கி விற்பனை செய்தும் விவசாய பணிகளை மேற்க்கொண்டு வந்துள்ளார்.

இவர் பேரிகை அருகே உள்ள S.தட்டனப்பள்ளி என்னும் கிராமத்தில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த உருதுளை கிழங்கு வாங்குவதற்காக சென்றுள்ளார்.

மேலும் படிக்க | ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டிய அதிகாரிகள்...

அப்போது வரப்பில் கால்நடைகளுக்காக புல்லறுத்தபோது தரையில் இருந்த மின் வயரை அரிவாளால் அறுத்தபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த வெங்கடேஷ் என்பவரது உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பேரிகை போலிசார் வெங்கடேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | உணவக கழிவு நீரால் விவசாய நிலம் பாதிப்பு... விவசாயிகள் புகார்...