தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் வாங்கிய விவசாயிகள்...

தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தலைமைச்செயலக முற்றுகை போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்காலிகமாக அதனை வாபஸ் பெற்றுள்ளனர்.
தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் வாங்கிய விவசாயிகள்...

தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வழங்கப்பட்ட பயிற்காப்பீடு குறித்த தரவுகளில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக, நாளை நவம்பர் 1 ஆம் நாள் தலைமை செயலக முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்து இருந்தனர்.

இந்த நிலையில், இன்று அதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு வேளாண்துறை இயக்குநர் அண்ணாதுரை அழைத்ததன் பேரில், சென்னை எழிலகத்தில் உள்ள வேளாண் துறை இயக்குனராக அலுவலகத்தில் அவரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர், ஓ ஏ நாராயணசாமி பேசியதாவது,

“நவம்பர் 1 ஆம் தேதி நாங்கள் போராட்டத்தை வைத்துள்ள நிலையில், வேளாண்மை துறை இயக்குநர் அண்ணாதுரை தலைமையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. 

எங்களது கோரிக்கைகளான விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வழங்கப்பட்ட பயிர் காப்பீடுகளில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. இதில் வேளாண்மை துறை அதிகாரிகள் சில தவறான கணக்குகளை கொடுத்துவிட்டனர். 

அந்த கணக்குகளால் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் இதனால் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண் இயக்குனரை சந்தித்து இதுகுறித்து விளக்கமாக பேசப்பட்டது. வேளாண்மை துறை அதிகாரிகள் எந்த விதத்தில் கணக்கெடுத்தார்கள், அந்த கணக்கின் அடிப்படை சாரம்சங்கள் உள்ளிட்டவற்றை நாங்கள் கொடுத்தோம். அவற்றை எல்லாம் இன்று ஒரு கமிட்டி போடப்பட்டு பரிசீலனை செய்தார்கள்.

பரிசீலனை செய்யப்பட்டதில் விருதுநகர் மாவட்டத்தில் இறந்துபோன ஒரு விவசாயியிடம் கையெழுத்து வாங்கி வைத்திருப்பதாக ஒரு ஆவணத்தை காட்டுகிறார்கள். அது அவ்வாறு இல்லை, அவர் இரண்டு விட்டார் என நாங்கள் நிரூபித்துள்ளோம்!

விருதுநகர் மாவட்டத்தில் 25 கிராமங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் திருவேங்கடம் தாலுகாவில் 45 கிராமங்கள், கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியத்தில் 40 மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆதாரத்துடன் இயக்குனருக்கு இதனை நிரூபித்து உள்ளோம். அவர்கள் அதனை 20 நாட்களுக்குள் பரிசீலித்து குளறுபடிகளை நீக்கி அதற்கான உத்திரவாதத்தை தருகிறோம் என வேளாண்துறை இயக்குநர் எங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் எங்கள் விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லை என்றால் கண்டிப்பாக தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடைபெறும். எனவே நாளை நடைபெறவிருந்த போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெறுகிறோம்!

தற்காலிகமாக அவர்கள் தங்களது போராட்டத்தினை வாபஸ் பெற்றிருந்தாலும், அவர்களது நிபந்தனைகள் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என அவர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com