கல்லணைக் கால்வாய்களை விரைந்து தூர்வாரக் கோரி விவசாயிகள் வலியுறுத்தல்..!

கல்லணைக் கால்வாய்களை விரைந்து தூர்வாரக் கோரி  விவசாயிகள் வலியுறுத்தல்..!
Published on
Updated on
1 min read

நாகுடி கல்லணை கால்வாய் நீர்ப்பாசன பகுதிகளை மழைக் காலத்திற்கு முன்பு விரைந்து தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நாகுடி கல்லணை கால்வாய் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் கிட்டத்தட்ட 27 ஆயிரம் ஏக்கரில் கல்லணை கால்வாய் நீரை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்

இதில் கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி கல்லணையில் இருந்து நீரானது திறக்கப்பட்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி நாகுடி கடைமடை பகுதிக்கு வந்தடைந்தது  கல்லணை கால்வாய் விவசாய சங்க தலைவர் மற்றும் விவசாயிகள் மலர் தூவி குலவையிட்டு வரவேற்றனர்.

இவ்வாறிருக்க,   நாகுடி கல்லணை கால்வாய் பகுதியில் சரியான முறையில் தாய்  வாய்க்கால்களை முறையாக தூர்வரப்படாமல் 250 கன அடிக்கு மேல் வரக்கூடிய நீரானது தற்பொழுது 50 கன அடி முதல் 55 கன அடி வரை வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

 குறிப்பாக, தூர் வாருவதற்காக அரசு சார்பாக 90 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில் தாய் வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்காலை  சரி செய்யப்படாமல் வடிகால் வாய்க்காலை தூர் வாருவது போல் படம் எடுத்து சென்றுள்ளனர்.

ஆகவே, ERM திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தங்கு தடை இன்றி ஏற்படுத்தி கொடுத்தால் நீரானது சீராக வரும் என கூறுகின்றனர் ஆகவே  அரசு இதை கவனத்தில் கொண்டு சரியான முறையில் இப்பகுதியை ஆய்வு செய்து தூர்வாரப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com