காசிமேட்டில் குவிந்த மீன் பிரியர்கள்...வியாபாரிகள் மகிழ்ச்சி...

காசிமேட்டில் குவிந்த மீன் பிரியர்கள்...வியாபாரிகள் மகிழ்ச்சி...
Published on
Updated on
2 min read

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கரைக்கு திரும்பிய அதிக அளவிலான விசைப்படகுகள் இயங்கி ,மீன்களின் வரத்து அதிகரித்து விலை குறைந்தது.இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கார்த்திகை பக்தி மாதத்தலும் காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் காசிமேடு திருவிழாவை போல காணப்பட்டது.வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் அதிக அளவிலான விசை படகுகள் கரைக்கு திரும்பியுள்ளன .

பொதுவாக விடுமுறை தினமான ஞாயிற்று கிழமையில் விற்பனைக்கு அதிக விசைப்படகுகள் வரும், இருந்த போதும் வானிலை மாற்ற காரணத்தினால் இன்று கிட்டதட்ட மொத்த படகுகளும் கரைக்கு திரும்பின.


நள்ளிரவு இரண்டு மணி அளவில் தொடங்கும் இந்த ஏல விற்பனை முறையில் மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து குவிந்தனர்.அதிக அளவு விசைப்படகுகளின் வருகையால் மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.இதனால் மீன்களின் விலையானது சற்று சரிந்தே காணப்பட்டது.பக்திமாதமான கார்த்திகை மாதம் சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய போதும் ஆர்வமாக மீன்களை வாங்க மக்கள் குவிந்தனர்.


மீன்களின் இன்றைய விலைப்பட்டியல் :

வஞ்சிரம் 700

வவ்வா 600

கொடுவா 450

சங்கரா 450

கடமா 300

இறால் 300

நண்டு 400 

மேலும் விலைகள் கடந்த மூன்று வாரங்களாக அதிக அளவு இருந்த நிலையில் இந்த வாரம் மீன்கள் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com