20 வருடங்களுக்கு பிறகு கொட்டும் மழையில் மீன்பிடி திருவிழா...

மானாமதுரை அருகே 20 வருடங்களுக்கு பிறகு கொட்டும் மழையில் மீன்பிடி திருவிழா நடந்தது.

20 வருடங்களுக்கு பிறகு கொட்டும் மழையில் மீன்பிடி திருவிழா...

சிவகங்கை | மானாமதுரை அருகே நத்தபுரக்கி கிராமத்தில் கொட்டும் மழையிலும் மீன்பிடி திருவிழா நடந்தது. நத்தபுரக்கியில் 50 ஏக்கர் பரப்பளவிலான வானம் பார்த்த கண்மாய் உள்ளது.

மழை பெய்தால் மட்டுமே கண்மாய்க்கு நீர் வரத்து உண்டு. கடந்தாண்டு பெய்த மழை காரணமாக கண்மாய் நிரம்பியது. தொடர்ந்து மழை இல்லாததாலும், விவசாயத்திற்கு பயன்படுத்தியதாலும் கண்மாயில் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.

மேலும் படிக்க | சம்பா, நெல் அறுவடை பணியில் தோய்வு - விவசாயிகள் கவலை!

இதனையடுத்து கண்மாயில் மீன்பிடி திருவிழா இன்று காலை தொடங்கியது. கொட்டும் மழையில் 200க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி கரை வலை, சேலை, தொட்டி வலை ஆகியவற்றை பயன்படுத்தி மீன் பிடித்தனர்.

கெளுத்தி, கெண்டை, கட்லா, விரால், அயிரை உள்ளிட்ட மீன் வகைகள் கிடைத்ததை பொதுமக்கள் ஆர்வத்துடன் எடுத்து சென்றனர்.

மேலும் படிக்க | 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்...எங்கே தெரியுமா?