வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... தரைப் பாலத்தை தொட்டு செல்லும் தண்ணீர்...

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... தரைப் பாலத்தை தொட்டு செல்லும் தண்ணீர்...

பரமக்குடி : வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தரைப்பாலத்தை தண்ணீர் தொட்டு செல்கிறது. தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

14000 கன அடி தண்ணீர் உபரி நீராக ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகுணைக்கு வந்தது. இன்று காலை சுமார் ஆறு மணி நிலவரப்படி 10754 கன அடி தண்ணீர் வந்தது.

மேலும் படிக்க | 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…!

மதகு அணையின் வலது பிரதான கால்வாயில் 774 கன அடியும், இடது பிரதான கால்வாயில் 1032 கனஅடியும், பரளை ஆற்றில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 7948 கன அடி தண்ணீர் பரமக்குடி வைகை ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து நான்காவது முறையாக பரமக்குடி வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பரமக்குடி, எமனேஸ்வரத்தை இணைக்கும் தரைப் பாலத்தை தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

மேலும் படிக்க | கனமழையால் 200 ஏக்கர் பயிர்கள் நாசம்... விவசாயிகள் வேதனை...

ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவித்தப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | 122 ஆண்டுகளில் இல்லாத மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டம்..! இன்று எங்கு ஆய்வு செய்கிறார் முதலமைச்சர்?