உறை பனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக குறைந்தபட்சமாக 2.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
உறை பனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
Published on
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு துவக்கம் முதலே உறைபனி பொழிவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உதகை, கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட நகர்புற பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுவதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

மேலும் அவலாஞ்சி, எமரால்டு, அப்பர்பவானி, குந்தா, முக்குருத்தி உள்ளிட்ட முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளில் - 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. உதகை நகர்புற பகுதிகளில் 2.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

நகர்புற பகுதிகளில் நிலவும் உறைபனி பொழிவை காட்டிலும் புறநகர் பகுதிகள், மலைப்பகுதிகள், தாழ்வான நீர்நிலைகள், விளைநிலங்கள், பச்சை புல்வெளிகளில் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி பொழிவு அதிகரித்து வெள்ளை கம்பளம் விரித்தார் போல் காட்சி அளித்தது.

அதேபோல் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது அதிகாலையில் உறைப் பனி படர்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

நாளுக்கு நாள் உறைபனியின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளை கடும் குளிரில் மேற்க் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் உறைபனி யின் காரணமாக ஓரிரு நாட்களில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு நகர்புறப்பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com