குடியிருப்பு பகுதிகளில் மலைப்  போல் குவிந்து கிடக்கும் குப்பை...நோய்த் தொற்றால் அவதி...

குடியிருப்பு பகுதிகளில் மலைப்  போல் குவிந்து கிடக்கும் குப்பை...நோய்த் தொற்றால் அவதி...

கூவம் ஆற்றில் குப்பை, 20 ஆண்டுகளாக மக்கள் போராட்டத்திற்கு மதிப்பளிக்காத அரசு அதிகாரிகள், நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் ஊராட்சி வெங்கத்தூர் ஊராட்சி கணேசபுரம் இளங்கோவடிகள் தெருவில் கூவம் ஆற்றுக் கரையோரம் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.கணேசபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது இறுதி சடங்கிற்காக பயன்படுத்தி வரும் சுடுகாடு மற்றும் இடுகாடு பகுதி இளங்கோவடிகள் தெரு கூவம் ஆற்றில் கரையில் உள்ளது.

 மலைப் போல் குவிந்து கிடக்கும் குப்பை :

பொதுமக்கள் தங்களது வாழ்விலும் இறுதி காலத்திலும் பயன்படுத்தி வந்த பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வெங்கத்தூர் ஊராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மருத்துவ கழிவுகள் மக்கும் மக்காத குப்பை இறந்த விலங்கினங்களில் உடல்கள் என சுமார் 200 டன்னுக்கும் மேலாக கூவம் ஆற்றின் கரையோரம் மற்றும் கூவம் ஆற்றுப்பகுதிகளில் கொட்டி வருவதால் கூவம் ஆற்றின் நடுவே தடுப்பணை கட்டியது போல் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது.

மேலும் படிக்க | சாதிப்பெயரை சொல்லி பெண்ணை திட்டிய காவலர் கைது...

பொதுமக்கள் குற்றச்சாட்டு :

மேலும் குடியிருப்பு பகுதிகள் உள்ள இடத்திலும் குப்பை கழிவுகளை வெங்கத்தூர் ஊராட்சி நிர்வாகம் கொட்டி வருவதால் அருகில் வசிப்பவர்கள் அடிக்கடி மர்ம காய்ச்சலாலும் இருதயம் சம்பந்தப்பட்ட நோயினாலும் கேன்சர் வியாதியாலும் அவதி உற்று வருவதாகவும் இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர்.

மேலும் படிக்க |மீண்டும் கழிவறையில் பிறந்த பச்சிளம் குழந்தை...

நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை :

மேலும் கணேசபுரம் பகுதி மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் குடிநீர் மேல் தேக்க தொட்டியும் அப்பகுதியில் இருப்பதால் காலரா உள்ளிட்ட வியாதிகளால் அவதி உற்று வருவதாகவும் தெரிவிக்கும் பொதுமக்கள் கணேசபுரம் சுற்றியுள்ள பகுதி மக்கள் உயிரிழந்தால் அவரது இறுதிச் சடங்கை நடத்த முடியாத அளவிற்கு சுடுகாட்டில் குப்பைகள் கொட்டி கழிவால் துர்நாற்றம் வீசுவதாகவும் மேலும் ஹரிச்சந்திரன் கோவிலை சுற்றி கழிவுநீர் கலந்த குப்பைகள் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் செல்ல முடியாமல் பெரிதும் அவதி உற்று வருகிறோம் எனவும் எனவே மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பையை அகற்ற வேண்டும் எனவும் கூவம் ஆற்றில் விஷம் போல் கலக்கும் கழிவை அகற்றி பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.