அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி...! பாராட்டுக்களை பெற்ற படைப்புகள்...!

அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி...! பாராட்டுக்களை பெற்ற படைப்புகள்...!

Published on

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இந்த அறிவியல் கண்காட்சியை கடையநல்லூர் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஒன்றிணைந்து தொடங்கி வைத்த நிலையில், இந்த அறிவியல் கண்காட்சியில் மாணவ, மாணவிகள் தாங்கள் கண்டுபிடித்த ஏராளமான படைப்புகளை காட்சிகளாக வைத்து அதற்கு செயல்முறை விளக்கம் தந்தனர். தற்போதைய விஞ்ஞான உலகத்தில் அறிவியலின் முக்கியத்துவம் எவ்வாறு உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாகவும் அறிவியல் தேவை மனித வாழ்விற்கு முக்கிய தேவை என்பதை உணர்த்தும் விதமாகவும் இந்த கண்காட்சி இருந்தது.

இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட சிறந்த படைப்புகளை போலீசார் மற்றும் வனத்துறையினர் மற்றும் சக மாணவர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினர். மேலும், இந்த கண்காட்சியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ராக்கெட் மற்றும் ஜேசிபி இயந்திரம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com