மக்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் - நெல்லையில் புதிய கலெக்டர்...

பொதுமக்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் என நெல்லையில் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மக்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் - நெல்லையில் புதிய கலெக்டர்...

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த விஷ்ணு பணியிட மாறுதல் ஆகி சென்னைக்கு சென்ற நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

வரலாற்று சிறப்பு மிகுந்த திருநெல்வேலி மாவட்டத்தில் 218 வது மாவட்ட ஆட்சித்தலைவராகவும் திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி இன்று தனியாக பிரிக்கப்பட்ட பிறகு பொறுப்பேற்றுக்கொண்ட 38வது ஆட்சித் தலைவராக கார்த்திகேயன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் படிக்க | அனுமதியின்றி மண் திருடிய 3 லாரிகள் பறிமுதல்... அதிரடியாக களம் இறங்கிய வட்டாட்சியர்...

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரலாற்று சிறப்புமிக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி என்றும் தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் தெரிவித்தார்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டம் புதுமைப்பெண் இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்த அவர் பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது மக்களினுடைய கோரிக்கைகள் கருத்துக்களை கேட்டு அறிவதாக தெரிவித்தார்.

மேலும், குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கேற்றார் போலான திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட கார்த்திகேயன் தெரிவித்தார்.

மேலும் படிக்க | கருவறைக்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சர்களால் பரபரப்பு...