தூத்துக்குடியில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை...

தூத்துக்குடியில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை...

தூத்துக்குடி | சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே கோடை வெயில் வெளுத்து வாங்கியது.அது மட்டுமல்லாமல் மழை பெய்வதற்கான சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று மாலை திடீரென சாத்தான்குளம் அருகில் உள்ள பேய்குளம் மற்றும் கோமானேரி பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

கடுமையான வெயிலின் தாக்கத்தில் இருந்த நிலையில் திடீரென மழை பெய்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால் மழையுடன் சேர்ந்து பனிக்கட்டி போன்ற ஆலங்கட்டி விழுந்ததால் பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் அதனை கைகளில் எடுத்து பார்த்து மகிழ்ந்தனர்.

பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | வெப்பச்சலனம் மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை மகிழ்ச்சியில் மக்கள்!!!!