உணவகங்களில் இரண்டு முறைக்கு மேல் எண்ணெய் பயன்படுத்தப்பட்டால்...!!!

உணவகங்களில் இரண்டு முறைக்கு மேல் எண்ணெய் பயன்படுத்தப்பட்டால்...!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில்   பதிவு சான்று மற்றும் உரிமம் பெறுதல் குறித்து சிறப்பு முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு சம்பந்தப்பட்ட வியாபார ஸ்தாபனங்கள் இயங்கி வருகிறது.  இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் பதிவுச் சான்று மற்றும் புதிய உரிமம் பெறுதல் உரிமம் புதுப்பித்தல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.  மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசி தீபா தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில்  உணவு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.  இதில் புதிய உரிமம் பெறுதல் மற்றும் உரிமம் புதுப்பித்தல்  உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் உணவு தொடர்பான வியாபாரங்களை மேற்கொள்ளும் வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  உணவகங்களில் இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்கள் ரூக்கோ திட்டத்தின் கீழ் மறுசுழற்சிக்கு அனுப்புதல் குறித்தும் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்படும் நிறுவனங்கள் அவர்களுக்கு உரிய  போஸ்ட்ராக் பயிற்சிக்கு அனுப்புதல் குறித்தும் உணவகங்களில் அதிகமாக மிஞ்சும் உணவுகளை நோ புட் வேஸ்ட் அமைப்பிடம் ஒப்படைத்து உணவுக்காக காத்திருப்பவர்களுக்கு வழங்குவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  

மேலும் இந்த சிறப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இதில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய  உணவு சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு புதிய உரிமம் வழங்குதல் மற்றும்  புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிக்க:   நிறுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள்...!!!