கணிதத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது......!!

கணிதத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது......!!

உதகையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு உதவியதாக எழுந்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களிடம் முதன்மை கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். 

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் மார்ச் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற கணித தேர்வில் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவியதாக புகார் எழுந்தது.  அதன்படி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்ட கல்வி அதிகாரிகள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை பணியிடை நீக்கம் செய்தனர்.  

இந்நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களிடம் கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, குறிப்பிட்ட 34 மாணவர்கள் மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற நிலையில், கணிதத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதது அதிர்ச்சி அளிப்பதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்க:  ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்... உயர்நீதிமன்றம் உத்தரவு!!!