மீண்டும் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்கள்!

பேரணியாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மனு வைத்து ஏகனாபுரம் கிராமமக்கள், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவாது முறையாக வேண்டுகோள் விடுத்தனர்.

மீண்டும் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்கள்!

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஓட்டி தமிழகம் முழுவதும் கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர்ஆகிய 5 ஒன்றியங்களிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றுவருகிறது.

காஞ்சிபுரம் அடுத்த ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் ஏகாம்பரத்தில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பரந்தூரில் புதிய அமைய இருக்கும் பசுமை விமான நிலையம் எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், மேள்லேறி, அங்கமாபுரம் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் தினந்தோறும் இரவில் 67 வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் இரண்டாவது முறையாக பசுமை விமான நிலையம் கைவிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்படது.

மேலும் படிக்க | மாப்பில் கிடைத்த 1 கிலோ தங்கம்! விமான நிலையத்தில் பறிமுதல்!

இதில் ஏகனபுரம் கிராமத்தில் நடைபெற கிராமசபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் கோபிநாத், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஜெகநாதன் உள்ளிட்டவர் பங்கேற்றனர். அதனை தொர்ந்து ஏகானாபுரம் கிராமமக்கள் பேரணியாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மனு ஒன்றினை அம்பேத்கரிடம் வைத்தனர்.

அதில் மத்திய, மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தால் காஞ்சிபுரம் வட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ஆகிய இரண்டு வட்டங்களை உள்ளடக்கிய 13 கிராமங்களில் வாழ்வாதாரத்தை படு பயங்கரமாக பாழ்படுத்தி நாசமாக்கும் வகையில் சூழல் அமைகிறது என்ற நிலையை விளக்கினர்.

மேலும் படிக்க | பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் நடந்த ஆண்டு விழா!

பின், அரசுக்கு பல மடங்குகளில் மனு அளித்தும், கடந்த 67 நாட்களாக பாதிப்புகளுக்கு உள்ளாகும் அனைத்து கிராமங்களிலும் மாலை நேர கண்டன போராட்டம் நடைபெற்று வரும் நிலையிலும், இதுவரை மாநில அரசு செவிசாய்க்க மறுத்து வருவதால் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட சமுதாய மக்களின் காவல் தெய்வம் ஆகிய தங்களிடம் முறையிடுவது என பொதுமக்கள் முடிவு செய்து இந்த மனு வினை தங்களிடம் சமர்ப்பிக்கிறோம் என தெரிவித்தனர்.

மேலும் இந்த மனுவில், “நன்கு விளையும் ‘நன்செய்’ நிலங்களும் புன்செய் நிலங்கள் மட்டுமல்லாமல் வேளாண்மைக்கு ஆதாரமாய் விளங்கும் அனைத்து நீர்மேலாண்மையையும் அழித்து ஒழிக்கும் அபாயகரமான வரைவு திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது என்பதோடு ஏகனாபுரம் கிராமம் குடியிருப்பு உட்பட முழுமையாக அழிக்கப்பட உள்ளது என்ற விவரத்தையும் தங்களின் ஆற்றல் மிகு பிரபஞ்சக வனத்தில் பதிவு செய்கிறோம்.”

மேலும் படிக்க | பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்..! தீர்வு கிடைக்குமா?

இதனால், தயவு செய்து பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தால் பாழ்பட்டு அழியப்போகும் பண்பாடோடும் பரம்பரை பரம்பரையாய் வாழ்ந்து வரும் வேளாண் பெருமக்கள் எப்படி வாழ்வார்கள் என்கிற நிலை ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டுகிறோம் என வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை அரசானத்தை கைவிட்டு வேறு மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த அவர்களுக்கு பிரபஞ்ச சிந்தனை வழங்குமாறும் தங்களை வேண்டுகிறோம். அனைத்து பிரிவினரும் அமைதியாய் தங்களால் வடிவமைக்கப்பட்ட சட்டத்தின் மூலமே சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் வாழ்ந்துவருகிறோம்.

மேலும் படிக்க | துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட 697 கிராம் தங்கம்..!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தின் மூலமே மிகப்பெரிய அளவில் பெருகும் என மக்களின் சேவையை தங்களின் சேவையாக கருதும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இந்த திட்டத்திற்காக தங்களுடைய மற்றும் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் அனைத்து ஆசையும் மற்றும் அசையா சொத்துக்களை நன்கொடையாக நாட்டின் வளர்ச்சிக்காக வழங்கினால் கிராம மக்களாகிய நாங்கள் எங்களின் விளைநிலங்களை மட்டும் உரிய இழப்பீடனை பெற்றுக் கொண்டு வழங்க எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என தங்கள் முன் உறுதியளிக்கிறோம். இதனால், தங்களது வேண்டுகோளை கருதுமாறு கூறினர்.

மேலும் ஏகனாபுரம் மட்டுமல்லாமல் நெல்வாய், மேலேறி , பரந்தூர், நாகபட்டு உள்ளிட்ட ஐந்து கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திலும் புதிதாக அமைய இருக்கும் விமான நிலையத்தை எதிர்த்து விவசாய நிலங்கள், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றனர்.

மேலும் படிக்க | எக்கனாமிக் வகுப்பில் பயணித்த சோழர்கள்!